இங்கு ஹாலிவுட் பேசப்படும்

Monday, December 5, 2016

Ultimate DC TV Universe - ஒரு பார்வை

CW Super Heroes
















Gotham City,Metroplis,Hub City,Starling/Star City,Keystone,Central City,National City இந்த இடங்களை எல்லாம் கேட்கும் போது  Batman,Superman,Green Arrow,The Flash,Vixen இப்படி எதாவது ஒரு சூப்பர் ஹீரோ உங்கள் மனதில் வந்தால்  இந்த பதிவு உங்களுக்குத்தான் ஜீ.

உள்ள போறதுக்கு முன்னாடி ஒரு அப்போலோஜி : ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு மாசம் முடிய முன்னமே நெருங்கிய ஒரு உறவினர் மரணம் so தொடர்ந்து எழுத முடியாம போச்சு அப்புறம் தான் யோசிச்சன் அவரு இறந்துட்டார்னு நான் என்ன சாப்பிடாமலா இருக்கன் இல்ல மற்ற வேலைகள் எல்லாம் செய்யாமல இருக்கன் இல்லையே அப்போ ஏன் தொடர்ந்து எழுதக் கூடாதுன்னு கழிவறையில் இருக்கும் போது என் கபாலத்தில் உதித்தது இந்த யோசனை ஆகவே நான் வந்துட்டேன் திரும்பி வந்துட்டேன்.

ஓகே விசயத்துக்கு வருவோம் என்னடா இவன் ஹாலிவுட் படங்கள பத்திதான எழுதுறன் அப்டின்னு சொன்னான் இப்ப TV சீரிஸ் பக்கம் போயிட்டானே அப்புடின்னு நீங்க நினைக்கலாம் (நினைக்கலனாலும் பிரச்சினை இல்லை) ஏன் நான் TV சீரிஸ் பற்றி  எழுதுகிறேன் என்றால் அது அவ்வளவு தரமாக உள்ளது ஜீ.ஆரம்பத்தில் பல சூப்பர்ஹீரோ TV சீரிஸ் வந்தது இருந்தாலும் அவை தனியே தன் பாதையிலேயே பயணித்தது ஆனால் 2012 இல இருந்து நம்ம CW வும் WB உம் போட்ட ஒப்பந்த்தந்தான் இந்த "Ultimate DC TV Universe"
அதாவது இதுவரைக்கும் பெரிய சீரியஸான ஒரிஜினல் சூப்பர்ஹீரோ படங்கள்ல வந்திராத காமிக்ஸ் உலகில் சக்க போடு போடும் சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரங்களுக்கு தனித் தனிய சீரீஸ் கொடுத்து அதுக்குள்ளே ஒரு தொடர்ப வச்சு இப்ப ரொம்ப சக்சஸா போய்க்கிட்டு இருக்குறதுதான் இந்த "Ultimate DC TV Universe".


அதாவது 2012 ல The Arrow னு ஒரு சீரிஸ் ஆரம்பிச்சாங்க அதுதான் Ultimate DC TV Universe ஓட கன்னி ஓட்டம் அப்புடியே அதோட இரண்டாவது சீசன்ல The Flash க்கு ஒரு இன்ட்ரோவ குடுத்தாங்க 2014 ல The Flash ஆரம்பிச்சுது அப்புடியே
The Arrow சீசன்கள்ள The Black Canary,The Atom,The White Canary அப்படியான கேரக்டர்கள அறிமுகப்படுத்திச்சுது கூடவே Suicide Squad உம் . அதே நேரம் The Flash ல Parallel Universe கான்சப்ட கொண்டுவந்தாங்க அதுல இருந்து நம்ம Superman,Batman அவங்கல்லாம் இருக்குற universe க்கு கொண்டுபோய் அங்க SuperGirl(நம்ம சூப்பர்மேன் அத்த பொண்ணு) அப்புடின்னு  ஒரு சீரிஸ் ஆரம்பிச்சாங்க (இப்ப அதுல சூப்பர்மேன் உம் சில எபிசோடுக்கு வாறாரு வார நாட்கள்ல பேட்மேன் உம் வரலாம்) அதுக்கப்புறம் The Arrow,The Flash சீரிஸ்ல இருந்த சில கேரக்டர்கள வச்சு டைம் டிராவல் கான்சப்டயும் புகுத்தி Legends Of Tomorrow சீரிஸ் உருவாக்குனாங்க.

உண்மையிலேயே நான்கு ஷோ உம் நல்ல விருவிருப்பா போகுது போன வாரம் நாலு சீரிசையும் ஜாயின்ட் பண்ணி The 4 Night Cross Over அப்புடின்னு போட்டாங்க ரொம்ப சூப்பரா இருந்துது தொடர்ந்து இந்த நாலு சீரிஸ் பத்தியும் தனித்தனிய எழுதலாம்னு யோசிச்சுருக்கன்.

தொடர்ந்து சீரிஸ் சம்பந்தமா எழுதுறத பத்தி உங்க கருத்த கமண்டுங்கோ

"குறைகள் என்னிடமும் நிறைகள் பிறரிடமும் கூறுங்கள்"

===எல்லாம் டோர்றேண்டித்தான் பார்த்தன் யாருக்காவது இந்த சீரிஸ் களோட Complete எபிசொட் லிங்க் வேணும்னாலும் கமன்ட் பண்ணுங்க===

நன்றி
Share:

Friday, October 14, 2016

Push (2009) Tamil Review - விமர்சனம்

Push (2009)


இரண்டாம் உலகப்போர் உலகில் பலருக்கு பல பாடங்களை சொல்லிக்கொடுத்தது.அது மாபெரும் உயிரிழப்பை ஏற்றுக்கொண்ட ஜப்பான் ஆகட்டும் இழிவாக நடத்தப்பட்ட யூதர்கலாகட்டும் வெறும் பகடைகளாக மட்டும் பயன்படுத்தப்பட்ட  தெற்காசிய நாடுகளாகட்டும் கண்டுகொள்ளாமலே விடப்பட்ட ஆபிரிக்கர்கள் ஆகட்டும் அனைவரும் அதிலிருந்து பல விடயங்களை புரிந்து கொண்டனர்.அதன் விளைவுதான் இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியும் கைக்குள்ளே அடங்கும் உலகமும்.என்னதான் உலகம் கைக்குள் இருந்தாலும் நம் கண் முன்னேயே நம்மை எமற்றிக்கொன்டுதான் இருக்கிறார்கள் நாமும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம்.அப்படின்னா இன்னைக்கு நாம் எல்லாரும் ஏமாறுகிறோம் so அத பத்துன ஏதும் படத்த பத்தி பார்க்க போரமான்னா இல்ல இன்னைக்கு எழுத போற படத்துக்கும் மேல சொன்னதுக்கும் உள்ள சின்ன ஒற்றுமை இந்த படத்தோட கதைக்கு லீட் குடுக்குறது இரண்டாம் உலகப்போர் தான் என்னன்னு பாக்கலாம் வாங்க.

Push(2009):இரண்டாம் உலகப்போரில் அனைவருமே திரும்பிபார்த்த ஒரு விடயம் ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிப்படைகளும் அவர்களது செயற்பாடுகளுமே.போரெல்லாம் முடிஞ்சப்புறம்தான் அவிங்க பண்ண எக்ஸ்பெரிமென்ட் எல்லாம் ஊர் உலகத்துக்கு தெரிஞ்சுது.அதுலயும் ஜோசப் மேன்களா அப்புடின்னு ஒரு வெறி புடிச்ச டாக்டர பத்தியும் பெசப்பட்டுது.இப்ப என்ன மேட்டர்னா இந்த நாஜிப் படைகளுக்கு(அவங்களுக்கு மட்டும் இல்ல இரண்டாம் உலகப்போர்ல முக்கிய பங்கு வகிச்ச எல்லா நாடுகளுக்கும்தான்) எவனோ ஒரு மாங்கா சூப்பர் ஹ்யூமன் ப்ராஜெக்ட் பத்தி சொல்லிருக்கான் சோ எல்லா நாடுகளும் அந்த எக்ச்பெரிமேன்ட்ல ஈடுபாடு காட்டுனாலும் ஜெர்மனியும் அமெரிக்காவும் காட்டுன அளவு வேற எந்த நாடும் காட்டல.ஓகே இப்ப கதைக்கு வருவோம்(இன்னும் நீ கதைக்கே வரலையா அப்புடின்னு சொல்ற உங்க மைன்ட் வாயிஸ் எனக்கு கேக்குது ப்ரோ இருந்தாலும் காலத்தின் தேவைக்காய் சில விடயங்கள் சொல்லத்தானே வேண்டும்)  அப்புடி ஜெர்மன் டாக்டர்ஸ் மனுஷனோட உள்ளுணர்வ தூண்டி விட்டு சூப்பர் ஹ்யூமன் உருவாக்க திட்டம் போட்டுருக்காங்க திட்டம்லாம் நல்லா போட்டும் எதுவும் சரி வரல இந்த ஐடியாவ நம்ம அமெரிக்க காரன் திருடி அவன் Division அப்புடின்குற அமைப்பு மூலமா சூப்பர் ஹ்யுமன உருவாக்கிடுராங்கக ஆனா அதுக்குள்ள போர் முடிஞ்சுது இப்ப உருவாகுனவங்கள வச்சு பரிசோதனை நாடத்த போறாங்க இவ்வளவும் டைட்டில்ல ஒரு பொண்ணு சொல்லுதுங்க.

சீக்குவல் பார்க்குறதுக்கு முன்னாடி இந்த சூப்பர் ஹ்யுமன்லாம் ஒவ்வொரு பவரோட இருக்காங்க சோ அவங்க யாரு அவங்க பவர் என்னன்னு பார்த்துடுவோம்.
1.Movers-டெலிகைனேடிக் பவர் இருக்கு சோ கைய அசச்சே எல்லாத்தையும்                          நகர்த்துவாங்க 
2.Pushers-அவங்க கண்ண நம்ம பார்த்தா நம்ம மனசுல அவங்க நெனச்சத                                  புகுத்தீருவாங்க 
3.Watchers-எதிர் காலத்த கணிக்க கூடியவங்க
4.Bleeders-சானிக் பூம்ஸ்ஸ உருவாக்குவாங்க சோ அத கேக்குறவன் காதுல                           இரத்தம் வடியும்
5.Sniffers-நம்ம யூஸ் பண்ற பொருள வச்சு நம்ம வரலார கண்டுபுடிப்பாங்க
6.Wipers-ஞாபகங்கள அழிக்குரவங்க
7.Shifters-எந்த பொருளைடயும் அவங்க நெனச்ச மாதிரி மாத்துவாங்க சேப்                              இல்ல கலர்,பெயிண்ட்,பேட்டர்ன் லைக் தட் 
8.Shadower-Watchers,Sniffers கிட்ட இருந்தது எதவேன்னாலும் மறைக்க                                             கூடியவங்க 
9.stitchers - குணமாக்குற சக்தி உள்ளவங்க.

இப்புடி 9 வகையான பவர் உள்ளவங்க மத்தியில்தான் கதை நகருது.ஆரம்பத்துலையே ஒரு அப்பா தன்னோட மகன ரொம்ப பரபரப்போட கூட்டிட்டு வந்து நம்மதான் நம்ம மாதிரி உள்ளவங்கள்ல கடைசி ஆளுங்க அப்புடின்னு சொல்லிட்டு எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல நீ ஓடிடு வருங்காலத்துல ஒரு பொண்ணு வந்து உன்கிட்ட பூ குடுப்பா அவள் உனக்கு Divisionன அழிக்க உதவி பண்ணுவான்னு சொல்லி கைய அசைக்க மகன் அதாவது நிக் அப்புடியே தரைல தானாகவே தள்ளப்பட்டு அடுத்த பக்கம் போய் விழுறாரு அங்க இருந்து ஒளிஞ்சு கிட்டு இருந்து பார்த்தா நம்ம FF7 ல வருவாரே ஒரு நீக்ரோ வில்லன் அவரு வந்து நிக் ஓட அப்பாவ கொன்னு பாடிய தூக்கிட்டு போய்றாரு.அதுக்கப்புறம் 10 வருஷம் கழிச்சு நிக் ஹாங் காங் ல தலைமறைவான வாழ்க்க வாழுரான்.அவன் ஒரு Mover இருந்தாலும் அவனோட பவர எப்புடி யூஸ் பண்ணனும்னு தெரியாதவனா இருக்குறான்,ரோட் சூதாட்டத்துல தன்னோட பவர வச்சு பணம் சம்பாதிக்கலாம்னு நெனச்சு விளையாடி நிறைய கடனத்தான் சம்பாதிக்கிறாரு.இதே டைம்ல Divisionல உருவாக்குன சூப்பர் ஹ்யூமன்ஸ்,அவங்களுக்கு பொறந்த குழந்தைங்க எல்லாரையும் வச்சு எக்ஸ்பெரிமென்ட் நடக்குது அதாவது பவர் பூஸ்ட் இன்ஜெக்சன் மூலமா சாதாரண மனுஷங்களையும் சூப்பர் ஹ்யூமன்ஸ்ஸா மாத்துற முயற்சிதான் இருந்தாலும் அந்த இன்ஜெக்சன போட்ட எல்லாருமே இறந்து போய்டறாங்க கீரா அப்டிங்குற பொண்ணுக்கு மட்டும் எதுவும் ஆகல ஆனா அவள் அங்க இருந்து தப்பிச்சுர்ரா கூடவே அந்த பவர் பூஸ்ட் இன்ஜெக்சன் ஒன்னையும் எடுத்துட்டும் போயிடுறாள்.அந்த இன்ஜெக்சன் எதிரிங்க கைல கெடச்சா பெரிய ஆபத்தாகிரும்னு அவள கண்டு பிடிக்க உத்தரவு போடுறாங்க.

கீராவ தேடி எல்லா இடத்துக்கும் போற டிவிஷன் ஏஜன்ட்ஸ் நம்ம நிக் வீட்டுக்கும் வாரங்க என்னடா நம்ம தலைமறைவா வாழ்ந்தாலும் நம்மள கண்டு புடிச்சுர்றாங்கலேன்னு கொழப்பத்துல இருக்கும்போது நிக்க தேடி 13 வயசு பொண்ணு வர்றா,வந்து தான் ஒரு Watcher னும் டிவிசன்ல இருக்குற என்னோட அம்மாவ காப்பாத்த நீ ஹெல்ப் பண்ணுவ உனக்கு அங்க இருக்குற 6 மில்லியன் டாலர் பணம் கெடைக்க போகுதுன்னும் அவன்கிட்ட சொல்ல முதல்ல நம்ப மறுத்தாலும் பணம் கெடைக்கும்னு சம்மதிக்கிறான்.இது இப்புடி இருக்க ஹோன்க் காங்ல இருக்குற பாப்ஸ் அப்டின்குற சூப்பர் பவர் உள்ள குடும்பம் அதுல அப்பாவும் ரெண்டு பசங்களும் Bleeders ஒரு பொண்ணு Watcher அந்த பொண்ணுக்கு அந்த இன்ஜெக்ஸன் மேட்டர் தெரிஞ்சுருது சோ இப்ப பாப்ஸ் குடும்பமும் இன்ஜெக்ஸன கண்டுபுடிச்சு வேற நாட்டுக்கு வித்து பணம் பாக்கலாம்னு அத தேடி அலையுறாங்க.நிக்குக்கு அந்த பூ குடுக்க போற பொண்ணு யாரு கீரா என்ன ஆனா மத்த பவர்ஸ்லாம் எப்புடி யூஸ் ஆகுது அதுக்கப்பறம் என்ன ஆச்சுங்குறதுதான் Push(2009).

நல்ல வித்தியாசமான திரைக்கதை அதாவது ஹீரோவா இருந்தாலும் சரி வில்லனா இருந்தாலும் சரி எல்லாருக்குமே ஒரே மாதிரி பவர்தான் பட் அத எப்புடி சாதூர்யமா பயன்படுத்தி யார் சாதிச்சாங்குரதுதான் மேட்டர் (நம்ம வாழ்க்க மாதிரியே).நிக் நம்ம கேப்டன் அமேரிக்கா க்ரிஸ் ஏவன்(நாசிஸ் சூப்பர் ஹ்யூமன் கண்டு புடிச்சா இவர் வந்துர்றார்ப்பா).Pushers ஆல நிறைய ட்விஸ்ட்லாம் படத்துல நடக்கும்  அதனாலேயே Push நு வச்சுட்டாங்கலோ தெரியல.

அவ்வலோதாங்க வேற ஏதும்னா கமன்ட் பண்ணுங்க ஜீ 

"குறைகள் என்னிடமும் நிறைகள் பிறரிடமும் கூறுங்கள்"

IMDB=6.1

===சூப்பர் ஹீரோ விரும்பிகள் வித்தியாசத்துக்காக கட்டாயம் பாருங்க மத்தவங்க செம திரில்லர் காக பாருங்க===

 நன்றி 
Share:

Monday, October 10, 2016

Suicide Squad (2016) Tamil Review - விமர்சனம்

Suicide Squad (2016)


சூப்பர் ஹீரோ படங்களுக்கே முன்னோடின்னு பார்த்தா அது நம்ம DC கமிக்ஸ்தான் (DC 1969 லதான் வந்தாலும் அதோட ஆணிவேர் NAB அப்டின்னு 1934 லையே உருவாக்கிட்டாங்க அதுக்கப்புறம்தான் மார்வல் 1939 ல ஆரம்பிக்கப்பட்டுது) அவங்கதான் 1966 ல பேட்மேன் அப்டிங்குற ஒரு சூப்பர் ஹீரோ படத்த தியேட்டரிகல்லா  அறிமுகம் செஞ்சு வச்சாங்க,அதுக்கப்புறம் புடிச்ச சூப்பர் ஹீரோ பட சூடு இன்னும் குறையாம 2050 வரைக்கும் இப்பவே பிளான் போட்டு வச்சுருக்கானுங்க (வடிவேலு அண்ணனோட தீவிர ரசிகங்களா இருப்பங்களோ) அப்புடி பல சூப்பர் ஹீரோஸ் பல விதமா இந்த உலகத்தையோ (அதான்யா அமேரிக்காவ) இல்ல இந்த பிரபஞ்சத்தையோ காப்பத்தியிருக்காங்க.இது போதாதுன்னு இந்த காமிக்ஸ் எழுதுறவங்க எவ்வளவு நாள்தான் நீங்களும் தனியாவே சண்ட போடுவிங்கன்னு அவன் அவன் உருவாக்குன சூப்பர் ஹீரோவெல்லாம் ஒன்னாக்கி All Star,Freedom Fighters,Forever People,Green Lantern Cop,Justice >>>> (Justice லையே நெறைய இருக்குப்பா),Secret Six,Team7 அப்புடி இப்புடினு DC யும் Alpha Flight,Avengers,Champions,Defenders (இன்னும் இருக்கு பாஸ் பட் வேணாம்) அப்புடின்னு Marvel உம் காமிக்ஸ் அடிச்சு விட்டாய்ங்க.அடடா இது நல்ல இருக்கேன்னு ரசிகர்கல்லாம் தூக்கி வச்சு கொண்டாட அதயும் படமாக்கி விட்டாங்க நம்ம ஹாலிவுட் கத்துக்குட்டிங்க.அப்புடி வந்ததுல பிரம்மாண்டமா முதல்ல வந்தது Avengers தான் அதுக்கப்புறம் அத நோக்கியே எல்லா சூப்பர் ஹீரோஸ் படமும் பயணிக்க ஆரம்பிச்சுது.

இப்புடி சூப்பர் ஹீரோஸ் எல்லாரையும் ஒன்னாக்குற கூத்த DCல DC Extended Universe(DCEU) அப்புடிங்குற தனி டீம் உருவாக்க ஆரம்பிச்சுது.இதோட முதல் முயற்சிதான் சூப்பர்மேன் ஓட ரீபூட் படமான Man Of Steel (அந்த ஜட்டிய உள்ள போட்டு வருவாரே அந்த படம்) அதுக்கப்புறம் Batman Vs Super Man  படம் இந்த வருஷம் வந்துது DCEU மூன்றாவது வெளியீடுதான் நம்ம இன்னைக்கு பார்க்க போற Suicide Squad (2016).அதுக்கு முன்னாடி DCEU இனுடைய எதிர்கால திட்டங்கள பார்த்துடுவோம் Wonder Women(2017),Justice League(2017) அதுக்கப்புறம் Justice Leagueல வார மத்த சூப்பர் ஹீரோஸ்க்கு சோலோ டேப்யு படங்களும் வர இருக்கு(அதான் 2050 வரைக்கும் இப்பவே பிளான் போட்டு வச்சுருக்கானுங்கனு சொன்னல்லன்).

 Suicide Squad (2016):சூப்பர் மேன் Batman Vs Super Man ல மண்டைய போட்டுர்றாருல இப்ப இன்னொரு சூப்பர் மேன் வந்தா என்னய்யா பண்ணுவிங்க நமக்குனு ஒரு பாதுகாப்பு வேணாம் அப்புடின்னு Amanda Waller னு ஒரு கெழவி ஒரு பிளான் போடுது அதாவது இந்த காமிக்ஸ்ல நம்ம தலைவருங்க(அதான்யா சூப்பர் ஹீரோஸ்)ஜெயில்ல அடைச்ச நல்லுள்ளம் படைத்த வில்லன்களை ஒன்னாக்கி அவங்கள விட கொடூரமான வில்லன்களை மண்ணாக்க Task Force X னு ஒன்ன உருவாக்க பாக்குறாங்க,அதுக்காக அவங்க செலக்ட் பண்றவங்க ஏதோ ஒரு வகைல கல்லுக்குள் ஈரமா இருக்கணும்னு,புடி பட்ட சூப்பர் வில்லன்கல்ல செம பீல் வர்ற பிளாஸ்பேக் உள்ள கொஞ்ச பேர செலக்ட் பண்றாங்க.



1.Dead Shot-(நம்ம Will Smith)காசுக்கு கொலை பண்ற ஒரு அஸ்ஸசின் ஹிட்மேன் அவரோட மகள் செண்டிமண்டால பேட்மேன் கிட்ட மாட்டி இப்ப ஜெயில்ல இருக்காரு

2.Harley Quinn-இவங்க ஒரு சைகாடிஸ்ட் நம்ம தல ஜோகர் கேஸ்ஸ ஹென்டல் பண்றப்ப ஜோகர் மேல லவ்வி அவங்களும் ஜோகரோட செர்ந்துர்றாங்க இவங்களையும் நம்ம பேட்மேன் தான் புடிச்சு உள்ள போடுறாரு(இவள புடிக்கும் போது பேட்மேன் ஒரு அடி அடிப்பாரு பாருங்க செம)

3.El Diablo-இவருக்கு இயல்பாவே நெருப்பு பவர் இருக்கு (இவருக்குத்தான் நெருப்புடா நெருங்குடா சாங் போடனும்) இவர் ஒரு கேங்க்ஸ்ட்டர் உணர்ச்சிவசப்பட்டதால அவோரடா குடும்பத்த டீ குடிக்க வச்சுர்ராறு சீசீ சாரிப்பா தீ குளிக்க வச்சுர்ராறு அந்த குற்ற உணர்ச்சில தானே சரண்டர் ஆயிடுறார்.

4.Captain Boomarang-பக்கா திருடன் இவருக்கு என்ன ஈரம்னு தெரியல பேட் நல்லவருப்பா அப்புடின்னு க்ளைமேக்ஸ் முன்னாடி ஒரு பார் சீன்ன்ல காமிப்பாங்க,இவர் பேன்க் ல கொள்ளை அடிக்கும்போது நம்ம Flash (வேகமா ஓடுவாப்புடி Justice League ல பாக்கலாம் இப்ப இவரோட ஒரு டிவி சீரிஸ் உம் செம த்ரில்லா போகுது)புடிச்சு ஜெயில்ல போட்டுர்றாரு.

5.Killer Crook:இலகுன மனசுள்ள அரக்கன் இவரு ஒரு Genetic Mutunt.(ஏன்டா நீ இப்புடி கலீச்சா இருக்கேன்னு கேக்க இவங்கதான் என்ன அப்புடி வச்சுருக்காங்கன்னு சொல்லுற இடம் சூப்பர்)

6.SlipKnot-இவரு இந்த படத்துல இவங்களுக்கு ஒரு டெமோ மாதிரித்தான் வர்றாரு (பட் காமிக்ஸ்ல நல்ல ஸ்கோப் இருக்கு)

7.Kattana-இவங்களோட ஹஸ்பண்ட எவனோ கொன்னுட்டான்னு ஜப்பான்ல நெறைய பேர்த போட்டு தள்ற சீன் தான் இவளுக்கு இன்ட்ரோ.இவ கவர்ன்மன்ட் ஏஜென்ட் நம்ம வில்லன்களுக்கு சாரி ஹீரோக்களுக்கு கன்றோலாமா.

8.Rick Flag-சோல்ஜர் எல்லாரையும் மேய்க்குற பொறுப்பு இவருக்குத்தான். இவரோட லவ்வர் June ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட் மாயன்ஸ்ட பிரமிட் மாதிரி ஒன்னுக்குள்ள போனதால இவ உடம்புக்குள்ள Enchantress அப்டிங்குற சூனியகாரி பூந்துட்டா பட் அவளோட இதயம் Amanda Waller கிட்ட இருக்கு சோ அவளும் கவர்மன்ட் கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கா.

இதுதான் Task Force X,

ஹீரோஸ் ரெடி அடுத்தது வில்லன்தான ட்ரைலர்ல நமக்கு ஜோகர் தான் மெயின் வில்லன் மாதிரி காட்டுவாங்க பட் உண்மையிலேயே வில்லன் இல்ல வில்லி அதான்யா அந்த சூனியகாரி.மந்திர தந்திரம்லாம் பண்ணி கவர்ன்மன்ட் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி அவ தம்பிய எழுப்பி விட்டுர்றா அவன் ஊர் முழுக்க அட்டகாசம் பண்ணித்திரிய இவள் இந்த பக்கம் தனக்குன்னு ஒரு படைய தயாரிக்குற மெஷின் ஒன்ன உருவாக்குறாள்.இதுதாண்டா டைம் அப்புடின்னு எறக்கி விடுறாங்க நம்ம Task Force X ஸ பட் வெளிய விடுறது பக்கா கிரிமினல்ஸ்ங்கறதால ஒவ்வொருத்தர் கழுத்துக்குள்ளையும் மினி பாம் செட் பண்றாங்க எவனாவது தப்பிக்கவோ இல்ல துரோகம் பண்ணவோ நெனச்சா கொன்னுடுவோம் அப்டின்னும் சொல்லறாங்க(இதுக்குத்தான் நம்ம slipknot யூஸ் ஆகுறாரு).ஆனாலும் அவங்க கிட்ட டெரரிஸ்ட் அட்டாக்குன்னு சொல்லித்தான் கூட்டி போறாங்க இந்த இடத்துல நம்ம will smith நாங்க என்ன தற்கொலை படையா (Suicide Squad) (ஐ டைட்டில் கெடச்சுருச்சு) அப்புடின்னு கேக்குறதுல இருந்து ஆரம்பிக்குது ரத குல துரதம் அதுக்கப்புறம் என்ன எப்புடியும் காப்பத்திருவாங்கன்னு தெரியும் இருந்தாலும் எப்புடி காப்பதுனாங்கன்னு படத்த பாருங்க.

ரொம்ப அருமையா திரைக்கதை அமச்சுருகாங்க இருந்தாலும் கதை இன்னும் நல்ல இருந்துருக்கலா மோன்னு லைட்டா தோணிச்சு.

படத்துல ஐயாவ லைக்குனதுன்னா; 

1.Will Smith உம் Harley Quinnனா நடிச்சவங்களுந்தான் முழு படத்தையும் தூக்கி நிறுத்துறாங்க,அதுலயும் Harley Quinn ஓட எக்ஸ்ப்ரஸ்ஸன்லாம் சூப்பர்யா.

2.Dead Shot ஓட உண்மையான கொடூரம் அவர் கைல வச்சுருக்க முகமூடிய போட்டத்தான் புரிஞ்சுக்கலாம் பட் அத போட்டா Will Smith அப்டிங்குற ஒரு தெறமையான நடிகன் வெளிக்காட்டப்படாதுன்னு  அந்த முகமூடிய பெருசா யூஸ் பண்ணலன்னு நினைக்குறன் இருந்தாலும் அவரு கார் மேல ஏறி எல்லா மொன்ஸ்டர் யும் தனிய சுடுவாரு பாருங்க அங்கதான் Will Smith நிக்கிறாரு 

3.ஜூன் சூனியக்கரியா மாறுர சீன் லாம் பக்காவா பொருந்தியிருக்கு.

4.ஒவ்வொருத்தருக்கும் பிளாஷ்பேக் போட்டு இன்ட்ரோ குடுப்பாங்க பாருங்க அந்த எடத்துலயே தெறிக்க விட்டாய்ங்க.

5.மியூசிக் அய்யயோ என்னம்மா குடுத்துருக்காங்க அதுலையும் நம்ம எமினெம் பாட்டு வர்ற சீன் சூபருய்யா.

6.லாஸ்ட்டா  Harley Quinnன தப்பிக்க வைக்குற சீன்ல அந்த SWAT சூட்ட உத்து கவனிங்க பாஸ்(என்னன்னு சொல்ல விரும்பல்ல இன்ட்ரஸ்ட் கோரஞ்சுரும்னு பட் அந்த சீன் செம மாஸ்) 

படத்துல இடிச்சது;

1.மூணு நாலு விதமான டைப்ல படம் போகுது.அது மேஜிக் படமா இல்ல ஆக்சன் படமா இல்ல லவ் ஸ்டோரியா இல்ல ஜோகேரோட ஜில் ஜங் ஜக்கா எதுன்னு கரெக்டா சொல்லல்ல

2.ஜோகர் அப்புடின்ன ஒடனே நம்ம நோலன் தம்பியோட டார்க் நைட் தான் மனசுல வரும் ஆகவே எவன் எப்புடி ஜோகர காமிச்சாலும் புடிக்க மாட்டிக்குது.

3.எங்கடா போனாங்க நம்ம சூப்பர் பவர் உள்ள சூப்பர் ஹீரோஸ்லாம்.படத்துல யாரையும் காட்டலன்னா பரவால்ல ஒன்னுக்கு ரெண்டு பேர காட்டுனிங்கலேடா,சரி பேட்மேன் தான் எங்கயாவது ஊர் சுத்த போயிருப்பார் திடீர் தாக்குதல்னதால வரமுடியல பட் நம்ம உசைன் போல்ட் Flash எங்க போனாரு (யாரவது google ல சரி கண்டு புடிச்சு கமண்டல ப்ளீஸ் சொல்லுங்க)


எல்லாம் சுபம் அப்புடின்னு போட்டப்புறம் நம்ம Justice League க்கு இன்ட்ரோ வேற வைக்குறாங்க அதையும் பாருங்க ஆனா Suicide Squadட மறந்துருங்க நாங்க Justice Leagueக தாரோம் அப்புடின்னு சொல்ற மாதிரி அந்த சீன் எனக்கு பட்டுது இருந்தாலும் Suicide Squad 2 இருக்குன்னு சொல்லிருக்காங்க பாக்கலாம்.

"குறைகள் என்னிடமும் நிறைகள் பிறரிடமும் கூறுங்கள்"


IMDB=6.7

===எல்லா சூப்பர் ஹீரோ ரசிகர்களும் இந்த சூப்பர் வில்லன் படத்த கண்டிப்பா பாக்கணும்,மத்தவங்களும் ஒரு என்டேர்டைனிங் காக பாருங்க===

நன்றி
Share:

BTemplates.com

Powered by Blogger.

Pages

Pages - Menu