இங்கு ஹாலிவுட் பேசப்படும்

Friday, October 14, 2016

Push (2009) Tamil Review - விமர்சனம்

Push (2009)


இரண்டாம் உலகப்போர் உலகில் பலருக்கு பல பாடங்களை சொல்லிக்கொடுத்தது.அது மாபெரும் உயிரிழப்பை ஏற்றுக்கொண்ட ஜப்பான் ஆகட்டும் இழிவாக நடத்தப்பட்ட யூதர்கலாகட்டும் வெறும் பகடைகளாக மட்டும் பயன்படுத்தப்பட்ட  தெற்காசிய நாடுகளாகட்டும் கண்டுகொள்ளாமலே விடப்பட்ட ஆபிரிக்கர்கள் ஆகட்டும் அனைவரும் அதிலிருந்து பல விடயங்களை புரிந்து கொண்டனர்.அதன் விளைவுதான் இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியும் கைக்குள்ளே அடங்கும் உலகமும்.என்னதான் உலகம் கைக்குள் இருந்தாலும் நம் கண் முன்னேயே நம்மை எமற்றிக்கொன்டுதான் இருக்கிறார்கள் நாமும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம்.அப்படின்னா இன்னைக்கு நாம் எல்லாரும் ஏமாறுகிறோம் so அத பத்துன ஏதும் படத்த பத்தி பார்க்க போரமான்னா இல்ல இன்னைக்கு எழுத போற படத்துக்கும் மேல சொன்னதுக்கும் உள்ள சின்ன ஒற்றுமை இந்த படத்தோட கதைக்கு லீட் குடுக்குறது இரண்டாம் உலகப்போர் தான் என்னன்னு பாக்கலாம் வாங்க.

Push(2009):இரண்டாம் உலகப்போரில் அனைவருமே திரும்பிபார்த்த ஒரு விடயம் ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிப்படைகளும் அவர்களது செயற்பாடுகளுமே.போரெல்லாம் முடிஞ்சப்புறம்தான் அவிங்க பண்ண எக்ஸ்பெரிமென்ட் எல்லாம் ஊர் உலகத்துக்கு தெரிஞ்சுது.அதுலயும் ஜோசப் மேன்களா அப்புடின்னு ஒரு வெறி புடிச்ச டாக்டர பத்தியும் பெசப்பட்டுது.இப்ப என்ன மேட்டர்னா இந்த நாஜிப் படைகளுக்கு(அவங்களுக்கு மட்டும் இல்ல இரண்டாம் உலகப்போர்ல முக்கிய பங்கு வகிச்ச எல்லா நாடுகளுக்கும்தான்) எவனோ ஒரு மாங்கா சூப்பர் ஹ்யூமன் ப்ராஜெக்ட் பத்தி சொல்லிருக்கான் சோ எல்லா நாடுகளும் அந்த எக்ச்பெரிமேன்ட்ல ஈடுபாடு காட்டுனாலும் ஜெர்மனியும் அமெரிக்காவும் காட்டுன அளவு வேற எந்த நாடும் காட்டல.ஓகே இப்ப கதைக்கு வருவோம்(இன்னும் நீ கதைக்கே வரலையா அப்புடின்னு சொல்ற உங்க மைன்ட் வாயிஸ் எனக்கு கேக்குது ப்ரோ இருந்தாலும் காலத்தின் தேவைக்காய் சில விடயங்கள் சொல்லத்தானே வேண்டும்)  அப்புடி ஜெர்மன் டாக்டர்ஸ் மனுஷனோட உள்ளுணர்வ தூண்டி விட்டு சூப்பர் ஹ்யூமன் உருவாக்க திட்டம் போட்டுருக்காங்க திட்டம்லாம் நல்லா போட்டும் எதுவும் சரி வரல இந்த ஐடியாவ நம்ம அமெரிக்க காரன் திருடி அவன் Division அப்புடின்குற அமைப்பு மூலமா சூப்பர் ஹ்யுமன உருவாக்கிடுராங்கக ஆனா அதுக்குள்ள போர் முடிஞ்சுது இப்ப உருவாகுனவங்கள வச்சு பரிசோதனை நாடத்த போறாங்க இவ்வளவும் டைட்டில்ல ஒரு பொண்ணு சொல்லுதுங்க.

சீக்குவல் பார்க்குறதுக்கு முன்னாடி இந்த சூப்பர் ஹ்யுமன்லாம் ஒவ்வொரு பவரோட இருக்காங்க சோ அவங்க யாரு அவங்க பவர் என்னன்னு பார்த்துடுவோம்.
1.Movers-டெலிகைனேடிக் பவர் இருக்கு சோ கைய அசச்சே எல்லாத்தையும்                          நகர்த்துவாங்க 
2.Pushers-அவங்க கண்ண நம்ம பார்த்தா நம்ம மனசுல அவங்க நெனச்சத                                  புகுத்தீருவாங்க 
3.Watchers-எதிர் காலத்த கணிக்க கூடியவங்க
4.Bleeders-சானிக் பூம்ஸ்ஸ உருவாக்குவாங்க சோ அத கேக்குறவன் காதுல                           இரத்தம் வடியும்
5.Sniffers-நம்ம யூஸ் பண்ற பொருள வச்சு நம்ம வரலார கண்டுபுடிப்பாங்க
6.Wipers-ஞாபகங்கள அழிக்குரவங்க
7.Shifters-எந்த பொருளைடயும் அவங்க நெனச்ச மாதிரி மாத்துவாங்க சேப்                              இல்ல கலர்,பெயிண்ட்,பேட்டர்ன் லைக் தட் 
8.Shadower-Watchers,Sniffers கிட்ட இருந்தது எதவேன்னாலும் மறைக்க                                             கூடியவங்க 
9.stitchers - குணமாக்குற சக்தி உள்ளவங்க.

இப்புடி 9 வகையான பவர் உள்ளவங்க மத்தியில்தான் கதை நகருது.ஆரம்பத்துலையே ஒரு அப்பா தன்னோட மகன ரொம்ப பரபரப்போட கூட்டிட்டு வந்து நம்மதான் நம்ம மாதிரி உள்ளவங்கள்ல கடைசி ஆளுங்க அப்புடின்னு சொல்லிட்டு எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல நீ ஓடிடு வருங்காலத்துல ஒரு பொண்ணு வந்து உன்கிட்ட பூ குடுப்பா அவள் உனக்கு Divisionன அழிக்க உதவி பண்ணுவான்னு சொல்லி கைய அசைக்க மகன் அதாவது நிக் அப்புடியே தரைல தானாகவே தள்ளப்பட்டு அடுத்த பக்கம் போய் விழுறாரு அங்க இருந்து ஒளிஞ்சு கிட்டு இருந்து பார்த்தா நம்ம FF7 ல வருவாரே ஒரு நீக்ரோ வில்லன் அவரு வந்து நிக் ஓட அப்பாவ கொன்னு பாடிய தூக்கிட்டு போய்றாரு.அதுக்கப்புறம் 10 வருஷம் கழிச்சு நிக் ஹாங் காங் ல தலைமறைவான வாழ்க்க வாழுரான்.அவன் ஒரு Mover இருந்தாலும் அவனோட பவர எப்புடி யூஸ் பண்ணனும்னு தெரியாதவனா இருக்குறான்,ரோட் சூதாட்டத்துல தன்னோட பவர வச்சு பணம் சம்பாதிக்கலாம்னு நெனச்சு விளையாடி நிறைய கடனத்தான் சம்பாதிக்கிறாரு.இதே டைம்ல Divisionல உருவாக்குன சூப்பர் ஹ்யூமன்ஸ்,அவங்களுக்கு பொறந்த குழந்தைங்க எல்லாரையும் வச்சு எக்ஸ்பெரிமென்ட் நடக்குது அதாவது பவர் பூஸ்ட் இன்ஜெக்சன் மூலமா சாதாரண மனுஷங்களையும் சூப்பர் ஹ்யூமன்ஸ்ஸா மாத்துற முயற்சிதான் இருந்தாலும் அந்த இன்ஜெக்சன போட்ட எல்லாருமே இறந்து போய்டறாங்க கீரா அப்டிங்குற பொண்ணுக்கு மட்டும் எதுவும் ஆகல ஆனா அவள் அங்க இருந்து தப்பிச்சுர்ரா கூடவே அந்த பவர் பூஸ்ட் இன்ஜெக்சன் ஒன்னையும் எடுத்துட்டும் போயிடுறாள்.அந்த இன்ஜெக்சன் எதிரிங்க கைல கெடச்சா பெரிய ஆபத்தாகிரும்னு அவள கண்டு பிடிக்க உத்தரவு போடுறாங்க.

கீராவ தேடி எல்லா இடத்துக்கும் போற டிவிஷன் ஏஜன்ட்ஸ் நம்ம நிக் வீட்டுக்கும் வாரங்க என்னடா நம்ம தலைமறைவா வாழ்ந்தாலும் நம்மள கண்டு புடிச்சுர்றாங்கலேன்னு கொழப்பத்துல இருக்கும்போது நிக்க தேடி 13 வயசு பொண்ணு வர்றா,வந்து தான் ஒரு Watcher னும் டிவிசன்ல இருக்குற என்னோட அம்மாவ காப்பாத்த நீ ஹெல்ப் பண்ணுவ உனக்கு அங்க இருக்குற 6 மில்லியன் டாலர் பணம் கெடைக்க போகுதுன்னும் அவன்கிட்ட சொல்ல முதல்ல நம்ப மறுத்தாலும் பணம் கெடைக்கும்னு சம்மதிக்கிறான்.இது இப்புடி இருக்க ஹோன்க் காங்ல இருக்குற பாப்ஸ் அப்டின்குற சூப்பர் பவர் உள்ள குடும்பம் அதுல அப்பாவும் ரெண்டு பசங்களும் Bleeders ஒரு பொண்ணு Watcher அந்த பொண்ணுக்கு அந்த இன்ஜெக்ஸன் மேட்டர் தெரிஞ்சுருது சோ இப்ப பாப்ஸ் குடும்பமும் இன்ஜெக்ஸன கண்டுபுடிச்சு வேற நாட்டுக்கு வித்து பணம் பாக்கலாம்னு அத தேடி அலையுறாங்க.நிக்குக்கு அந்த பூ குடுக்க போற பொண்ணு யாரு கீரா என்ன ஆனா மத்த பவர்ஸ்லாம் எப்புடி யூஸ் ஆகுது அதுக்கப்பறம் என்ன ஆச்சுங்குறதுதான் Push(2009).

நல்ல வித்தியாசமான திரைக்கதை அதாவது ஹீரோவா இருந்தாலும் சரி வில்லனா இருந்தாலும் சரி எல்லாருக்குமே ஒரே மாதிரி பவர்தான் பட் அத எப்புடி சாதூர்யமா பயன்படுத்தி யார் சாதிச்சாங்குரதுதான் மேட்டர் (நம்ம வாழ்க்க மாதிரியே).நிக் நம்ம கேப்டன் அமேரிக்கா க்ரிஸ் ஏவன்(நாசிஸ் சூப்பர் ஹ்யூமன் கண்டு புடிச்சா இவர் வந்துர்றார்ப்பா).Pushers ஆல நிறைய ட்விஸ்ட்லாம் படத்துல நடக்கும்  அதனாலேயே Push நு வச்சுட்டாங்கலோ தெரியல.

அவ்வலோதாங்க வேற ஏதும்னா கமன்ட் பண்ணுங்க ஜீ 

"குறைகள் என்னிடமும் நிறைகள் பிறரிடமும் கூறுங்கள்"

IMDB=6.1

===சூப்பர் ஹீரோ விரும்பிகள் வித்தியாசத்துக்காக கட்டாயம் பாருங்க மத்தவங்க செம திரில்லர் காக பாருங்க===

 நன்றி 
Share:

Monday, October 10, 2016

Suicide Squad (2016) Tamil Review - விமர்சனம்

Suicide Squad (2016)


சூப்பர் ஹீரோ படங்களுக்கே முன்னோடின்னு பார்த்தா அது நம்ம DC கமிக்ஸ்தான் (DC 1969 லதான் வந்தாலும் அதோட ஆணிவேர் NAB அப்டின்னு 1934 லையே உருவாக்கிட்டாங்க அதுக்கப்புறம்தான் மார்வல் 1939 ல ஆரம்பிக்கப்பட்டுது) அவங்கதான் 1966 ல பேட்மேன் அப்டிங்குற ஒரு சூப்பர் ஹீரோ படத்த தியேட்டரிகல்லா  அறிமுகம் செஞ்சு வச்சாங்க,அதுக்கப்புறம் புடிச்ச சூப்பர் ஹீரோ பட சூடு இன்னும் குறையாம 2050 வரைக்கும் இப்பவே பிளான் போட்டு வச்சுருக்கானுங்க (வடிவேலு அண்ணனோட தீவிர ரசிகங்களா இருப்பங்களோ) அப்புடி பல சூப்பர் ஹீரோஸ் பல விதமா இந்த உலகத்தையோ (அதான்யா அமேரிக்காவ) இல்ல இந்த பிரபஞ்சத்தையோ காப்பத்தியிருக்காங்க.இது போதாதுன்னு இந்த காமிக்ஸ் எழுதுறவங்க எவ்வளவு நாள்தான் நீங்களும் தனியாவே சண்ட போடுவிங்கன்னு அவன் அவன் உருவாக்குன சூப்பர் ஹீரோவெல்லாம் ஒன்னாக்கி All Star,Freedom Fighters,Forever People,Green Lantern Cop,Justice >>>> (Justice லையே நெறைய இருக்குப்பா),Secret Six,Team7 அப்புடி இப்புடினு DC யும் Alpha Flight,Avengers,Champions,Defenders (இன்னும் இருக்கு பாஸ் பட் வேணாம்) அப்புடின்னு Marvel உம் காமிக்ஸ் அடிச்சு விட்டாய்ங்க.அடடா இது நல்ல இருக்கேன்னு ரசிகர்கல்லாம் தூக்கி வச்சு கொண்டாட அதயும் படமாக்கி விட்டாங்க நம்ம ஹாலிவுட் கத்துக்குட்டிங்க.அப்புடி வந்ததுல பிரம்மாண்டமா முதல்ல வந்தது Avengers தான் அதுக்கப்புறம் அத நோக்கியே எல்லா சூப்பர் ஹீரோஸ் படமும் பயணிக்க ஆரம்பிச்சுது.

இப்புடி சூப்பர் ஹீரோஸ் எல்லாரையும் ஒன்னாக்குற கூத்த DCல DC Extended Universe(DCEU) அப்புடிங்குற தனி டீம் உருவாக்க ஆரம்பிச்சுது.இதோட முதல் முயற்சிதான் சூப்பர்மேன் ஓட ரீபூட் படமான Man Of Steel (அந்த ஜட்டிய உள்ள போட்டு வருவாரே அந்த படம்) அதுக்கப்புறம் Batman Vs Super Man  படம் இந்த வருஷம் வந்துது DCEU மூன்றாவது வெளியீடுதான் நம்ம இன்னைக்கு பார்க்க போற Suicide Squad (2016).அதுக்கு முன்னாடி DCEU இனுடைய எதிர்கால திட்டங்கள பார்த்துடுவோம் Wonder Women(2017),Justice League(2017) அதுக்கப்புறம் Justice Leagueல வார மத்த சூப்பர் ஹீரோஸ்க்கு சோலோ டேப்யு படங்களும் வர இருக்கு(அதான் 2050 வரைக்கும் இப்பவே பிளான் போட்டு வச்சுருக்கானுங்கனு சொன்னல்லன்).

 Suicide Squad (2016):சூப்பர் மேன் Batman Vs Super Man ல மண்டைய போட்டுர்றாருல இப்ப இன்னொரு சூப்பர் மேன் வந்தா என்னய்யா பண்ணுவிங்க நமக்குனு ஒரு பாதுகாப்பு வேணாம் அப்புடின்னு Amanda Waller னு ஒரு கெழவி ஒரு பிளான் போடுது அதாவது இந்த காமிக்ஸ்ல நம்ம தலைவருங்க(அதான்யா சூப்பர் ஹீரோஸ்)ஜெயில்ல அடைச்ச நல்லுள்ளம் படைத்த வில்லன்களை ஒன்னாக்கி அவங்கள விட கொடூரமான வில்லன்களை மண்ணாக்க Task Force X னு ஒன்ன உருவாக்க பாக்குறாங்க,அதுக்காக அவங்க செலக்ட் பண்றவங்க ஏதோ ஒரு வகைல கல்லுக்குள் ஈரமா இருக்கணும்னு,புடி பட்ட சூப்பர் வில்லன்கல்ல செம பீல் வர்ற பிளாஸ்பேக் உள்ள கொஞ்ச பேர செலக்ட் பண்றாங்க.



1.Dead Shot-(நம்ம Will Smith)காசுக்கு கொலை பண்ற ஒரு அஸ்ஸசின் ஹிட்மேன் அவரோட மகள் செண்டிமண்டால பேட்மேன் கிட்ட மாட்டி இப்ப ஜெயில்ல இருக்காரு

2.Harley Quinn-இவங்க ஒரு சைகாடிஸ்ட் நம்ம தல ஜோகர் கேஸ்ஸ ஹென்டல் பண்றப்ப ஜோகர் மேல லவ்வி அவங்களும் ஜோகரோட செர்ந்துர்றாங்க இவங்களையும் நம்ம பேட்மேன் தான் புடிச்சு உள்ள போடுறாரு(இவள புடிக்கும் போது பேட்மேன் ஒரு அடி அடிப்பாரு பாருங்க செம)

3.El Diablo-இவருக்கு இயல்பாவே நெருப்பு பவர் இருக்கு (இவருக்குத்தான் நெருப்புடா நெருங்குடா சாங் போடனும்) இவர் ஒரு கேங்க்ஸ்ட்டர் உணர்ச்சிவசப்பட்டதால அவோரடா குடும்பத்த டீ குடிக்க வச்சுர்ராறு சீசீ சாரிப்பா தீ குளிக்க வச்சுர்ராறு அந்த குற்ற உணர்ச்சில தானே சரண்டர் ஆயிடுறார்.

4.Captain Boomarang-பக்கா திருடன் இவருக்கு என்ன ஈரம்னு தெரியல பேட் நல்லவருப்பா அப்புடின்னு க்ளைமேக்ஸ் முன்னாடி ஒரு பார் சீன்ன்ல காமிப்பாங்க,இவர் பேன்க் ல கொள்ளை அடிக்கும்போது நம்ம Flash (வேகமா ஓடுவாப்புடி Justice League ல பாக்கலாம் இப்ப இவரோட ஒரு டிவி சீரிஸ் உம் செம த்ரில்லா போகுது)புடிச்சு ஜெயில்ல போட்டுர்றாரு.

5.Killer Crook:இலகுன மனசுள்ள அரக்கன் இவரு ஒரு Genetic Mutunt.(ஏன்டா நீ இப்புடி கலீச்சா இருக்கேன்னு கேக்க இவங்கதான் என்ன அப்புடி வச்சுருக்காங்கன்னு சொல்லுற இடம் சூப்பர்)

6.SlipKnot-இவரு இந்த படத்துல இவங்களுக்கு ஒரு டெமோ மாதிரித்தான் வர்றாரு (பட் காமிக்ஸ்ல நல்ல ஸ்கோப் இருக்கு)

7.Kattana-இவங்களோட ஹஸ்பண்ட எவனோ கொன்னுட்டான்னு ஜப்பான்ல நெறைய பேர்த போட்டு தள்ற சீன் தான் இவளுக்கு இன்ட்ரோ.இவ கவர்ன்மன்ட் ஏஜென்ட் நம்ம வில்லன்களுக்கு சாரி ஹீரோக்களுக்கு கன்றோலாமா.

8.Rick Flag-சோல்ஜர் எல்லாரையும் மேய்க்குற பொறுப்பு இவருக்குத்தான். இவரோட லவ்வர் June ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட் மாயன்ஸ்ட பிரமிட் மாதிரி ஒன்னுக்குள்ள போனதால இவ உடம்புக்குள்ள Enchantress அப்டிங்குற சூனியகாரி பூந்துட்டா பட் அவளோட இதயம் Amanda Waller கிட்ட இருக்கு சோ அவளும் கவர்மன்ட் கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கா.

இதுதான் Task Force X,

ஹீரோஸ் ரெடி அடுத்தது வில்லன்தான ட்ரைலர்ல நமக்கு ஜோகர் தான் மெயின் வில்லன் மாதிரி காட்டுவாங்க பட் உண்மையிலேயே வில்லன் இல்ல வில்லி அதான்யா அந்த சூனியகாரி.மந்திர தந்திரம்லாம் பண்ணி கவர்ன்மன்ட் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி அவ தம்பிய எழுப்பி விட்டுர்றா அவன் ஊர் முழுக்க அட்டகாசம் பண்ணித்திரிய இவள் இந்த பக்கம் தனக்குன்னு ஒரு படைய தயாரிக்குற மெஷின் ஒன்ன உருவாக்குறாள்.இதுதாண்டா டைம் அப்புடின்னு எறக்கி விடுறாங்க நம்ம Task Force X ஸ பட் வெளிய விடுறது பக்கா கிரிமினல்ஸ்ங்கறதால ஒவ்வொருத்தர் கழுத்துக்குள்ளையும் மினி பாம் செட் பண்றாங்க எவனாவது தப்பிக்கவோ இல்ல துரோகம் பண்ணவோ நெனச்சா கொன்னுடுவோம் அப்டின்னும் சொல்லறாங்க(இதுக்குத்தான் நம்ம slipknot யூஸ் ஆகுறாரு).ஆனாலும் அவங்க கிட்ட டெரரிஸ்ட் அட்டாக்குன்னு சொல்லித்தான் கூட்டி போறாங்க இந்த இடத்துல நம்ம will smith நாங்க என்ன தற்கொலை படையா (Suicide Squad) (ஐ டைட்டில் கெடச்சுருச்சு) அப்புடின்னு கேக்குறதுல இருந்து ஆரம்பிக்குது ரத குல துரதம் அதுக்கப்புறம் என்ன எப்புடியும் காப்பத்திருவாங்கன்னு தெரியும் இருந்தாலும் எப்புடி காப்பதுனாங்கன்னு படத்த பாருங்க.

ரொம்ப அருமையா திரைக்கதை அமச்சுருகாங்க இருந்தாலும் கதை இன்னும் நல்ல இருந்துருக்கலா மோன்னு லைட்டா தோணிச்சு.

படத்துல ஐயாவ லைக்குனதுன்னா; 

1.Will Smith உம் Harley Quinnனா நடிச்சவங்களுந்தான் முழு படத்தையும் தூக்கி நிறுத்துறாங்க,அதுலயும் Harley Quinn ஓட எக்ஸ்ப்ரஸ்ஸன்லாம் சூப்பர்யா.

2.Dead Shot ஓட உண்மையான கொடூரம் அவர் கைல வச்சுருக்க முகமூடிய போட்டத்தான் புரிஞ்சுக்கலாம் பட் அத போட்டா Will Smith அப்டிங்குற ஒரு தெறமையான நடிகன் வெளிக்காட்டப்படாதுன்னு  அந்த முகமூடிய பெருசா யூஸ் பண்ணலன்னு நினைக்குறன் இருந்தாலும் அவரு கார் மேல ஏறி எல்லா மொன்ஸ்டர் யும் தனிய சுடுவாரு பாருங்க அங்கதான் Will Smith நிக்கிறாரு 

3.ஜூன் சூனியக்கரியா மாறுர சீன் லாம் பக்காவா பொருந்தியிருக்கு.

4.ஒவ்வொருத்தருக்கும் பிளாஷ்பேக் போட்டு இன்ட்ரோ குடுப்பாங்க பாருங்க அந்த எடத்துலயே தெறிக்க விட்டாய்ங்க.

5.மியூசிக் அய்யயோ என்னம்மா குடுத்துருக்காங்க அதுலையும் நம்ம எமினெம் பாட்டு வர்ற சீன் சூபருய்யா.

6.லாஸ்ட்டா  Harley Quinnன தப்பிக்க வைக்குற சீன்ல அந்த SWAT சூட்ட உத்து கவனிங்க பாஸ்(என்னன்னு சொல்ல விரும்பல்ல இன்ட்ரஸ்ட் கோரஞ்சுரும்னு பட் அந்த சீன் செம மாஸ்) 

படத்துல இடிச்சது;

1.மூணு நாலு விதமான டைப்ல படம் போகுது.அது மேஜிக் படமா இல்ல ஆக்சன் படமா இல்ல லவ் ஸ்டோரியா இல்ல ஜோகேரோட ஜில் ஜங் ஜக்கா எதுன்னு கரெக்டா சொல்லல்ல

2.ஜோகர் அப்புடின்ன ஒடனே நம்ம நோலன் தம்பியோட டார்க் நைட் தான் மனசுல வரும் ஆகவே எவன் எப்புடி ஜோகர காமிச்சாலும் புடிக்க மாட்டிக்குது.

3.எங்கடா போனாங்க நம்ம சூப்பர் பவர் உள்ள சூப்பர் ஹீரோஸ்லாம்.படத்துல யாரையும் காட்டலன்னா பரவால்ல ஒன்னுக்கு ரெண்டு பேர காட்டுனிங்கலேடா,சரி பேட்மேன் தான் எங்கயாவது ஊர் சுத்த போயிருப்பார் திடீர் தாக்குதல்னதால வரமுடியல பட் நம்ம உசைன் போல்ட் Flash எங்க போனாரு (யாரவது google ல சரி கண்டு புடிச்சு கமண்டல ப்ளீஸ் சொல்லுங்க)


எல்லாம் சுபம் அப்புடின்னு போட்டப்புறம் நம்ம Justice League க்கு இன்ட்ரோ வேற வைக்குறாங்க அதையும் பாருங்க ஆனா Suicide Squadட மறந்துருங்க நாங்க Justice Leagueக தாரோம் அப்புடின்னு சொல்ற மாதிரி அந்த சீன் எனக்கு பட்டுது இருந்தாலும் Suicide Squad 2 இருக்குன்னு சொல்லிருக்காங்க பாக்கலாம்.

"குறைகள் என்னிடமும் நிறைகள் பிறரிடமும் கூறுங்கள்"


IMDB=6.7

===எல்லா சூப்பர் ஹீரோ ரசிகர்களும் இந்த சூப்பர் வில்லன் படத்த கண்டிப்பா பாக்கணும்,மத்தவங்களும் ஒரு என்டேர்டைனிங் காக பாருங்க===

நன்றி
Share:

Saturday, October 8, 2016

The Judge (2014) Tamil Review - விமர்சனம்

The Judge (2014)


The Judge (2014): சிகாகோல பெரிய திறமையான வக்கீல் தான் Hank Palmar (நம்ம IronMan ராபர்ட் டவ்னி ஜூனியர்),அவரு கோர்ட்ல இருக்கும்போது அவர் அண்ணன்கிட்ட இருந்து அவங்க அம்மா இறந்துடதா செய்தி வருது இவரும் அவரோட சொந்த ஊருக்கு கெளம்பி போறாரு.

அங்க அவங்க அம்மாவோட இறுதி சடங்கெல்லாம் நல்ல படியா முடியுது,பட் பால்மர்க்கும் அவர் அப்பாக்கும் ஏதோ ஒரு மனக்கசப்பு இருக்குன்னும் காட்டுறாங்க,பால்மர் அப்பாதான் அந்த ஊரோட ஜட்ஜ்.சரி இறுதி சடங்குக்கு வந்தவரு ஒரு நாள் இருந்துட்டு அடுத்த நாள் காலைல சிகாகோ கெளம்பி போறாரு அவரு ப்ளைட்ல இருக்கும்போது அவர் அண்ணன் "அப்பாவ ஒரு கொலை கேஸ்ல சந்தேகத்தின் பேர்ல கைது பண்ணிடாங்க" அப்டின்னு சொல்ல உடனே அவரு சிகாகோ போகாம திரும்பி வந்துடுறாரு,அப்புறம் அவர் அப்பாக்காக வாதாடி ஜெயிச்சாரா,ரெண்டு பேரோடயும் மனக்கசப்பு என்னாச்சு,யாரு உண்மையான கொலைகாரன் அப்டிங்குரதுதான் The Judge (2014).

எப்பயுமே பவர் சூட் குள்ள ஒளிஞ்சு கெடக்குற நம்ம ஜூனியர் ஓட நடிப்பு தெறமய வெளிக்காட்ட கூடிய ஒரு படம்தான் இந்த The Judge (2014),என்னம்மா நடிச்சுருக்காறு இல்ல இல்ல வாழ்ந்துருக்காறு.இவருதான் இப்புடி  நடிச்சுருக்காறேன்னு பார்த்தா இவரோட அப்பாவா நடிச்ச ராபர்ட் டுவால்லும் இவருக்கு இணையா நடிச்சுருக்காறு.ரெண்டு பேருக்குள்ளேயும் கெமிஸ்ட்ரி அப்பப்பப்பா செமையா வேர்கவுட் ஆயிருக்கு.

trailer லாம் பார்த்து நான் ஏதோ கோர்ட் டிராமா படம்னுதான் நெனச்சன் அதெல்லாம் உடச்சு இது ஒரு குடும்ப உறவை பத்துன கதைடா அப்புடின்னு பின் மண்டைல அடிச்ச மாதிரி சொன்னாரு பாருங்க நம்ம டைரக்டர் டேவிட் டோப்கின்.டேவிட் டோப்கின் நமக்கு தெரிஞ்ச மாதிரி நம்ம ஜாக்கி சானோட "சங்காய் நைட்ஸ்" படம் குடுத்துருக்காரு.

ஒரு சீன்ல டுவாலே உடம்புக்கு முடியாம அவரோட கண்ட்ரோல் இல்லாம மலங்களிச்சுருவாறு அப்ப அவரு குடுப்பாரு பாருங்க ஒரு ரியாக்ஸன் அதுக்காகவே அவர ஆஸ்கார்ல நாமினேட் பண்ணிருப்பாங்கன்னு நினைக்குரன்.அடுத்து நம்ம ஜூனியர் தம்பி ஒரு புத்தி வளர்ச்சி இல்லாதவரா நடிச்சுருப்பாரு சூப்பருங்க.படத்துல காட்டுற லொகேஷன் எல்லாம் நம்ம வழமையா பாக்குற ஹாலிவுட் படங்கள் மாதிரி இல்லாம வித்தியாசமான உணர்வ குடுக்குது.

படத்துல ஜூனியரோட பழைய லவ்வர் ஓட சீன் லாம் கொஞ்சம் படத்தோட வேகத்த கம்மி பண்ணாலும் ரசிக்குற மாதிரி இருந்துது, இருந்தாலும் அவளோட பொன்னையே இவரு கரக்ட் பண்ணுவாரு பாரு அய்யையோ ......

படத்த பார்த்து முடிஞ்சப்புறம் நம்ம அப்பாவோட நெனைப்பு வரும் பாருங்க அதுதான் இந்த படத்தோட ப்ளஸ்.    

அவ்வலோதாங்க,இந்த படத்த பத்தி மேலதிக மேட்டர் தேவைப்பட்டால் கூகுளை நாடவும் இல்லை கமன்ட் போடவும்.


"குறைகள் என்னிடமும் நிறைகள் பிறரிடமும் கூறுங்கள்"

IMDB=7.4

===நல்ல feel good த்ரில்லர் திரைப்படம் பக்கனும்னாலும் இல்லன்னாலும் இந்த படத்த பாருங்க===


நன்றி
Share:

Friday, October 7, 2016

Pixels (2015) Tamil Review - விமர்சனம்

Pixels (2015)




Classic arcade கேம்ஸ், 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களிலும் உலகை ஆட்டிப்படைத்த பொழுதுபோக்கு அம்சம் ,90 களின் பிற்பகுதியில் வீட்டிலேயே வைத்து விளையாடும் கேம் கன்சொல்களின் தாக்கத்தால் Classic arcade கேம்ஸ் வெகுவாக குறைந்தது.ஆனால் இன்று பழையதை கொண்டாடும் மோகத்திலும் பெருமைக்காகவும் சிலரின் உண்மையான Classic arcade கேம்ஸ் வெறியிலும் பலரால் பல இடங்களில் பழைய முறைப்படியே காயின் இட்டு விளையாடப்படுகிறது.

ஏன்டா இந்த வரலாறு பாடம்னு கேட்குற நல்லுள்ளங்களே இன்னைக்கு நான் எழுத போற படம் முற்று முழுதாகவே  Classic arcade கேம்ஸ் பிரியர்களுக்கானதும் (உங்க சின்ன வயசுல ஒத்த சர்கியுட்ல கமாண்டோ ,மேரியோ, பெக்மன் கேம்ஸ்லாம் விளையாடி, இப்ப உள்ள மோசன் ரியலிஸ்டிக் கேம்ஸ் பார்க்குற நேரத்துல நாங்க விளையாடினது போல வருமான்னு கேட்டா நீங்களும் Classic arcade கேம்ஸ் பிரியர்தான் ஜீ) அனிமேஷன் அட்வன்ட்சர் ரசிகர்களுக்குமாக எடுக்கப்பட்ட  Pixels (2015) திரைப்படத்தை பற்றித்தான்.

படம் : 1982 ல ரெண்டு சின்ன பசங்க (Sam Brenner and Will Cooper) Classic arcade கேம்ஸ் சென்டருக்கு போறதுல ஆரம்பிக்குது,அங்க போற நம்ம பசங்கள்ள sam எல்லா கேம்ஸ்ளையும் உள்ள பெட்டர்ன்ன கண்டு புடிச்சு ரொம்ப தெரமயா விளையாடுறாரு,அப்புறம் ஒரு விடியோ கேம் சாம்பியன்ஷிப்ல கலந்துக்குறாரு பைனல் வரைக்கும் வந்து பைனல் பெக்மேன் கேம்ஸ்ல Eddie Plant அப்டின்குற ஒரு குள்ளன்கிட்ட (நம்ம X-Men: Days of Future Past செண்டினல்ஸ உருவாக்குவாறே அவரு) தோத்து போய்றாரு.அதேநேரம் அந்த போட்டிய விண்வெளிலயும் டெலிகாஸ்ட் பண்றாங்க.  

அதுக்கப்புறம் படம் 33 வருஷம் தாண்டி  Sam வீடு வீடா போய் டிவி,பிளேஸ்டேசன் இப்புடி
எலக்ட்ரிக் பொருட்கள் பொருத்துற வேல பார்த்துட்டு இருக்காரு நம்ம Will Cooper அமெரிக்க ஜனாதிபதியா இருக்காரு,இந்த நேரத்துல வானத்துல UFO ஒன்னு "கெலகா" மாதிரி வந்து அமெரிக்க ராணுவ முகாம்ல தாக்குதல் நடத்துது,அது சூட் பண்ற எல்லாமே சின்ன சின்ன க்யூப்ஸ்ஸா மாறிருது,அது மட்டும் இல்லாம ஒரு சொல்ஜரையும் தூக்கிட்டு போகுது,எவண்டா அது அமெரிக்கா மேல கைய்ய வச்சதுன்னுது வட்ட மேசை போட்டு அது சீனாவா இந்தியாவா இல்ல ஈராக்கா அப்புடி இப்புடின்னு டிஸ்கஸ் பண்றாங்க,பட் ராணுவ முகாம்ல நடந்த தாக்குதல் விடியோவ பார்த்த நம்ம sam உம் cooper உம் அது அவங்க சின்ன வயசுல விளையாடுன "கெலகா" ன்னு ஐட்டண்டிபை பண்றாங்க இத வட்ட மேசைல உள்ள பெருசுங்க நம்ப மறுக்குறாங்க,அப்புறம் எல்லா டிவி சேனல்லையும் ஒரு விடியோ பூட்டஜ் ப்ளே ஆகுது என்னன்னா "அந்த ஒரு விடியோ கேம் சாம்பியன்ஷிப் விண்வெளில டெலிகாஸ்ட் பன்னாங்கள்ள அத முட்டாள் ஏளியன் நம்மள  பூமி வாசிங்க போருக்கு அறை கூவல் விடுத்துருக்குன்னு 33 வருஷமா ரெடி ஆவி இப்ப பூமியோட  Classic arcade கேம்ஸ் விளையாடி போர் தொடுக்கனுமா" இந்த மெசேஜ் கூட மனுசங்க விண்வெளில என்னல்லாம் டெலிகாஸ்ட் பண்ணாங்களோ அதுல இருந்து கஷ்டப்பட்டு எடிட் பண்ணி கிறேட் பண்ணி திரும்ப பூமிக்கே டெலிகாஸ்ட் பண்ணுதுங்க,

ஓகே அம்புட்டுத்தான் பூமிய எவனாவது அழிக்க வந்தா விட்டுறுவானா மனுஷன் (எங்களுக்குள்ளையே அடிச்சு அழிஞ்சுக்குவோம்) இருக்குற  Classic arcade கேம்ஸ் எக்ஸ்பேர்ட் எல்லாரையும் ஒன்னாக்கி படத்த என்ன மன்னாக்குனாங்க அப்டிங்குரதுதான் Pixels (2015).

உண்மையிலேயே இது ஜஸ்ட் என்டர்டைனிங் படம் மட்டுந்தாங்க எந்த தாக்கமோ மாற்றமோ வர்ற படம் இல்ல பட் 2D ல இருக்குற எலிமென்ட் எல்லாத்தையும் அப்புடியே 3D க்கு கொண்டு வந்த VFX டீம் ஓட effort காகவே படம் பாக்கலாம்.

படம் 2010 ல இதே பேர்ல வந்த ஒரு சோர்ட் பில்ம் ஓட இன்ஸ்பைர் தான்.இத நம்ம HarryPotter 1&2  home alone 1,2  யும் produce பண்ண  Chris Columbus தான் டைரக்ட் பண்ணி இருக்காரு,critics கையாள படம் ரொம்ப அடி வாங்குனாலும் நல்ல வித்தியாசமான படம், Classic arcade கேம்ஸ் பிரியர்கள் எல்லாருமே செம காண்டாகுனாங்க பிகாஸ் நம்ம விரும்பி விளையாடுன கேரக்டர் எல்லாத்தையும் வில்லனா காட்டிடாங்கலேன்னுதான் இருந்தாலும் படம் ஒரு புது அனுபவத்த தர்றதால பாக்கலாம் ஜீ .


மேலதிக மேட்டருக்கு கமண்டை நாடவும் 

"குறைகள் என்னிடமும் நிறைகள் பிறரிடமும் கூறுங்கள்"


IMDB=5.6

====வீட்டுல 3D பில்ம் பாக்குற வசதி இருந்தா கண்டிப்பா பசங்களோட பாருங்க இல்லன்னாலும் பாருங்க=====



நன்றி 
Share:

Thursday, October 6, 2016

Lazer Team (2015) Tamil Review - விமர்சனம்


Lazer Team (2015)






////வருடம் 1977, ஒரு கோடைகால இரவு, வழக்கம் போல தான் ஆய்வகதில் விண்வெளியை பற்றியும், வேற்றுலாக வாசிகளை பற்றியும் ஆராய்சி செய்துகொண்டு இருந்தார்  ஜெர்ரி எஹ்மான்,(Jerry Ehman). அன்று இரவு வழக்காதிற்கு மாறாக அவரது கணினி ஏதோ ஒரு ரேடியோ சிக்னலை பதிவு செய்தது.அந்த சிக்னல்(தகவல்/ சாமிக்ஞை) ஒரு 72 நொடிகளுக்கு தொடர்ந்து கிடைத்தது.எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த நிகழ்ல்வு ஜெர்ரியை திகைப்படைய வைத்தது. உடனேயே அந்த சிக்னலை, செய்தியாக கணினியின் உதவியுடன் பரிமாற்றப்பட்டது. இதற்கு மட்டும் மூன்று நாட்கள் எடுதுக் கொண்டதாக தெரிகிறது.அவ்வாறு பரிமாற்றப்பட்ட வார்த்தை தான் “வாவ்”.
wow

அதாவது நாம் பூமியில் வாழும் உயிரினகளால் அனுப்ப படாத, நம் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து பெறப்பட்ட ஒரே தகவல். இந்த தகவல் டௌ சகிட்டரீ  (Tau Sagittarii), என்ற நட்சதிரனின் சுற்றுப்புரதத்திலிருந்து வததாக பின்னர் கண்டறியப் பட்டது.இந்த நட்சதிரம் பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் (1 light-year= 9.4605284 × 10^12 kilometers) தொலைவிலிருந்து வந்தது.ஆனால் அது தான் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து நாம் பெற்ற முதல் மற்றும் கடைசி தகவல்.
அந்த தகவல் அனுப்பப்பட்ட அலைவரிசை 1420MHz . இந்த ரேடியோ அலைவரிசை வீண்வலி ஆய்விற்கு உகந்ததாக உள்ளதால் இந்த அலைவரிசை மற்ற வானொலி, தொலைக்கச்சியின்  பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த அலைவரிசைக்கு ஹைட்ரஜன் லைன்  என்று பெயர்.

receiver
1977ல் பெறப்பட்ட பிறகு இன்று வரை வேறு எந்த சிக்னலும் பெறப்படவில்லை.ஒரு வேலை வேறு எந்த சிக்னலும் அனுப்ப படாவிளய, அல்லது அந்த தகவ்ல் அனுப்பப்பட்டு நம்மால் பெற முடியாமல் போனதா என்று இன்றுவரை விடை இல்லை.
35 வருடங்களாக பூமியிலிருது பல சிக்னல்கள் அந்த சிக்னல் வந்த திசை நோக்கி அனுப்பப் பட்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு நாள் அந்த சிக்னலை பற்றிய ஆய்விற்கு சரியான விடை கிடைக்கும். அப்போது எளியன்கள் பற்றிய மர்மங்கள் விலகும்.அவர்கள் இருப்பது உன்மயானால், அது நம் பூமியின் வரலாற்றை வேறு ஒரு புதிய பாதை நோக்கி அழைத்து செல்லும். இந்த வாவ் பற்றியும், எளியன்கள் பற்றிய உங்கள் கருதுக்களை பகிருங்கள்////  நன்றி  Tamil GENIUS.

என்னடா இவன் சயன்ஸ் டியூஷன் எடுக்குரானேன்னு யோசிக்க ஆரம்பிச்ச என் அன்பு உள்ளங்களே இந்த சம்பவத்துக்கும் இன்னைக்கு எழுதப்போற படத்துக்கும் என்ன சம்பந்தம்னா இந்த படத்துக்கு லீட் எடுத்து கொடுக்குறதே இந்த சம்பவந்தான் அந்த சிங்க்னல வச்சு நம்ம ஹாலிவுட் ஆசாமிகளின் Sci-Fi காமெடி அட்டகாசம்தான் இந்த Lazer Team.

ஆரம்பத்துல சொன்ன மாதிரியே இந்த சிக்னல் வர்ற சீன் ஓட ஆரம்பிக்குது படம் ஆனா இங்க வாவ் சிக்னல் இல்லாம ஒரு அறிவுப்பு இல்ல இல்ல ஒரு எச்சரிக்க வருது அதாவது "வார்க் (Worg) அப்டிங்குற ஒரு உயிரினம் பூமிய அழிக்க வரப்போகுது so அத எதிர்க்குறதுக்கு ஒரு மாவீரன ரெடி பண்ணுங்க" அது மட்டும் இல்லாம உங்களுக்கு உதவிக்கு எங்க கிட்ட உள்ள பவர்புல் சூட் போருக்கு சில நாளைக்கு முன்னாடி அனுப்பி வைக்கிறோம் அப்டின்னு அந்த சிக்னல் சொல்லுது,

அப்புறம் என்ன விடுவானா நம்ம அமெரிக்க காரன் அதுல இருந்து ஒரு மாவீரன தயார் செய்றாங்க (நீங்க நெனைக்குற மாதிரி நம்ம ராம்சரண் இல்லங்க இவரு வேற) அப்புடியே 37 வருஷம் கழியுது போரும் நடக்க போகுது so நம்ம மாவீரன் (திரும்பவும் சொல்றன் ராம்சரண் இல்ல) வரப்போற சூட் காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு.இந்த டைம் பார்ட்டில கலாட்டா பண்ண Zack அ அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போறாரு ஆபீசர் Hagan போற வழில அனுமதியில்லாம பட்டாசு கொளுத்திகிட்டு இருக்குற Woody,Harman ரெண்டு பேரையும் அரஸ்ட் பண்ண போறதா சொல்லி அவங்ககிட்ட சொல்ல இதுக்கும் சேர்த்து அரஸ்ட் பண்ணுன்னு பெரிய சைஸ் ராக்கெட் ஒன்ன விடுறாரு Harman அது போய் நம்ம மாவீரனுக்கு வர்ற சூட் உள்ள UFO ல மோதிருது,அதோட அந்த UFO இந்த 4 பேரும் இருக்குற எடத்துல வந்தது விழுது,அப்புறம் நம்ம BEN 10 கார்டூன் ல வர்ற மாதிரி அந்த சூட்ல உள்ள ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருத்தர் உடம்புல மட்டிருது,Zack, lazer generator ஒன்ன மாடிக்கிராறு Hagan,க்கு ஷீல்ட் கெடைக்குது woodyக்கு inteligent ஹெல்மெட் அப்புறம் Harmanக்கு வேகமா ஓட வைக்குற பூட்ஸ்.

சூட்காக வெய்ட் பண்ண நம்ம மாவீரனும் இராணுவமும் UFO விழுந்த இடத்துக்கு வந்து பாக்குறாங்க பார்ட்ஸ் எல்லாம் உடம்புல மாட்டிகிட்டா எடுக்க எலாதுன்னு சொல்லி நம்ம மாவீரன இந்த நாலு பேருக்கும் கோச் ஆக்குறாங்க,37 வருஷமா வெய்ட் பண்ண மாவீரன் கடைசில கோச் ஆகிட்டமேன்னு கடுப்புல இவங்க ஒழுங்கா ட்ரைனிங் எடுக்கலைனா அந்த பாட்ஸ் எல்லாத்தையும் வெட்டி எடுப்போம்னு சொல்றாறு இத நம்ம woody ஹெல்மட் பவரால கேட்டுர்றாரு அப்புறம் இவங்க அங்க இருந்து தப்பிக்க பண்ற அட்டூழியம் அது போதாதுன்னு Worg அனுப்புற alien டெக்னாலஜி அப்புடி இப்புடி ன்னு ரதகலம் பண்ணி கடைசில நம்ம புலிகேசி ஐடியாவ வச்சு அதுல நம்ம மாவீரனோட தியாகத்த கலந்து பூமிய காப்பாதுனாங்களா இல்ல என்ன எழவுதான் நடந்துதுன்னு படத்த பாருங்க..

இந்த படம் யூட்டுப் ல செம கலக்கு கலக்குற காமடி சரவெடி அதிரடி சீரீஸ் ஆன Red Vs Blue வ தயாரிச்சு youtube லையே வெளியிட்டு பணமும் புகழும் அடைஞ்ச நம்ம Rooster Teeth சானல் தான் தயாரிச்சு இருக்காங்க(youtube லையே சம்பாதிச்ச காசாம்ப்பா) RVB  எப்புடியோ அது மாதிரித்தான் இந்த படத்துலயும் செம காமடி உண்மையிலேயே அந்த ஹாஸ்பிடல் சீன் செம ஜாலிங்க,ஆனா என்ன படத்துல adult ஜோக்ஸ் நெறைய இருக்கு adult மூவ்மெண்ட்ஸ் இருக்கு பட் naked சீன் இல்ல இருந்தாலும் தனியாவோ இல்ல friends ஓடயோ பாருங்க..........

மேலதிக மேட்டருக்கு கமண்டை நாடவும் 

"குறைகள் என்னிடமும் நிறைகள் பிறரிடமும் கூறுங்கள்"

IMDB=5.7 


========படத்துல sci-Fi மேட்டர் குறைவுதான் இருந்தாலும் காமெடி அட்வஞ்சர் காக போர் அடிக்காம பாக்கலாம்====== 


நன்றி


Share:

Wednesday, October 5, 2016

Project Almanac(2015) - Tamil Review - விமர்சனம்

Project Almanac(2015)
















Time travel ஹாலிவுட்ல எப்பவுமே மதிப்புள்ள concept தான் அத வச்சு 2015 ஜனவரி 30 ல ரிலீஸ் ஆன படம்தான் Project Almanac அத பத்தி தான் இன்னைக்கு நான் எழுதப்போறன்
(என்னடா இவன் மொத போஸ்ட் லையே பழைய மொக்க [அப்புடி critics சொல்றாங்க] படத்த பத்தி எழுதுறானேன்னு நினைப்பிங்க but i like this movie)

ஓகே கதை என்னன்னு பார்த்தா David Raskin ஹை ஸ்கூல்ல படிக்குற பையன் அவனுக்கு MIT ள படிக்கணும்னு ஆச so டேவிட்டு அதுக்குன்னு ஒரு ப்ராஜெக்ட் பண்ணி MIT க்கு அப்ளை பண்றாரு அதுல செலேக்டும் ஆகிடுராறு. பட் MIT க்கு என்ட்ரி பீஸ் கட்ட வசதியில்லாததால இன்னொரு ப்ராஜெக்ட் பண்ணி ஸ்கொலர்ஷிப் க்கு அப்ளை பண்ண தன்னோட இறந்து போன அப்பாவோட குறிப்புகள்ல எதாவது மாட்டுமான்னு அப்பாட பழைய திங்க்ஸ் ல தேடிக்கிட்டு இருக்கும்போது டேவிட் ஓட தங்கச்சி பழைய கேமரா ஒன்ன பார்க்குறா அது வொர்க் ஆகுதான்னு செக் பண்றப்போ டேவிட் ஓட எழாவது பர்த்டே வீடியோ போகுது (அன்னைக்குத்தான் அவர் அப்பாவும் இறந்தாறு) .அந்த வீடியோ ல உள்ள கண்ணாடில இப்ப உள்ள டேவிட் தெரிய சொக் ஆகுற டேவிட் அவனோட ரெண்டு பிரெண்ட்சையும் கூப்டு காட்டுறாரு.அப்புறம் அந்த வீடியோ ல உள்ள பெரிய வயசு டேவிட் என்ன பன்றாருன்னு பார்த்தா அவரு அந்த வீட்டோட பேஸ்மன்ட் க்கு போறாரு சோ இப்போ இந்த நாலு பேரும்   பேஸ்மன்ட் க்கு போய் செக் பண்றதுல டேவிட் ஓட அப்பா ரகசியமா மறச்சு வச்சுயிருந்த முழுசா முடிக்காத  "temporal displacement device" (அதான்யா டைம் மெசின்) உம் அதோட instruction உம் கிடைக்குது ...............

அப்புறம் என்ன time machine மாடல் இருக்கு MIT க்கு போற அளவு மூள உள்ள ஒருத்தர் இருக்காரு ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம். அதேதான் பையன் time machine அ உருவக்குறாப்புடி எல்லா time machine படத்துல வர்ற மாதிரியும் இதுலயும் இறந்த காலத்துக்கு போய் சேஞ்ச் பண்ற சின்ன மேட்டர் ஆல பெரிய மாற்றமே நடக்குது (அதான்யா butterfly effect) சோ அதுக்கப்றம் என்ன நடந்துது அப்டிங்கறதுதான் படம்....

ஏன் எனக்கு இந்த படம் புடிச்சு இருந்துதுன்னா :

1.எனக்கு ரொம்ப புடிச்ச Sci-Fi ஜேனர் அதுலயும் time travel
2.Teen intelligent
3.found footage camera angle(படத்துல உள்ள ஒரு கேரக்டர் ரெகார்ட் பண்ற மாதிரி      காட்டுவாங்க)
4.வசனங்கள்.

இதுங்கள விட்டு ஜெனரல்லா special effects,background music,பெரிய famous ஆன crew இல்லன்னாலும் அவங்க நடிப்பு,time machine  எல்லாம் "அட" போட வச்சுது

படத்தோட குறைகள் அப்டின்னு critics முக்கியமா found footage camera angle அ சொல்லிருக்காங்க but எனக்கு அது புடிச்சு இருந்துது.அப்புறம் படத்துல ஒரு சீன் interest ஆ போய்கிட்டு இருக்கும்போது அடுத்த சீன் மொக்கயா போகுது எனக்கும் இதே பீல் வந்துது but டோடல் படம் ஆ பாக்குறப்ப அதுவும் அவலோ பெரிய குறையா தெரியல.

இந்த படத்த Dean Israelite டைரக்ட் பண்ணி இருக்காரு அவோரோட முதல் பெரிய படம் இதுதான் பிகாஸ் producer நம்ம transformer டைரக்டர் Michael Bay.   Dean Israelite இப்போ அடுத்த வருஷம் ரிலீஸ் ஆகபோற "Power Rangers" படத்த டைரக்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு....

படத்துல என்ன ரொம்ப கவர்ந்த விஷயங்கள்/வசனங்கள்
1. டைம் ட்ராவல் பண்ணா ஹிட்லர் கொன்னுடு அப்படின்னு டேவிட் ஓட friend சொல்றப்ப அதுக்கு டேவிட் நம்ம யாருக்குமே ஜேர்மன் பேச தெரியாதேன்னு சொல்ல அதுக்குத்தான் கடவுள் google translator அ படச்சிருக்கார்னு  அவன் தங்கச்சி சொல்ல 1939 ல wifi இல்லையேன்னு அவன் சொல்றது செம.
2.டேவிட் உம் அவன்  friends உம் term வேர்ட்ஸ்ஸ யூஸ் பண்றப்ப அவன் தங்கச்சி "in English" அப்டின்னு கேக்குறது நல்லா இருந்துது.
3.எக்ஸாம்ல பாஸ் ஆகுற சீன்லாம் சூப்பர். .
4.time machine அ உருவாக்குற சீன் time travel அ விட செம interesting ஆ இருந்துது.
5.டேவிட்டுக்கு physics ரொம்ப நல்லா தெரியுற மாதிரியே David-jessie chemistry உம் நல்லா இருந்துது.

படத்த பத்தி அவ்ளோதான் போஸ்ட்ல சொல்லிருக்கன் வேற ஏதும்னா comment பண்ணுங்க ஜீ
"குறைகள் என்னிடமும் நிறைகள் பிறரிடமும் கூறுங்கள்"
Almanac=பஞ்சாங்கம்
IMDB=6.4/10

===கதைக்காக ஒரு தடவ பாக்கலாம்,புடிச்ச சின்ன சின்ன விஷயங்களுக்காக எத்துண தடவையும் பாக்கலாம் ====


நன்றி


Share:

BTemplates.com

Powered by Blogger.

Pages

Pages - Menu