இங்கு ஹாலிவுட் பேசப்படும்

Wednesday, October 5, 2016

Project Almanac(2015) - Tamil Review - விமர்சனம்

Project Almanac(2015)
Time travel ஹாலிவுட்ல எப்பவுமே மதிப்புள்ள concept தான் அத வச்சு 2015 ஜனவரி 30 ல ரிலீஸ் ஆன படம்தான் Project Almanac அத பத்தி தான் இன்னைக்கு நான் எழுதப்போறன்
(என்னடா இவன் மொத போஸ்ட் லையே பழைய மொக்க [அப்புடி critics சொல்றாங்க] படத்த பத்தி எழுதுறானேன்னு நினைப்பிங்க but i like this movie)

ஓகே கதை என்னன்னு பார்த்தா David Raskin ஹை ஸ்கூல்ல படிக்குற பையன் அவனுக்கு MIT ள படிக்கணும்னு ஆச so டேவிட்டு அதுக்குன்னு ஒரு ப்ராஜெக்ட் பண்ணி MIT க்கு அப்ளை பண்றாரு அதுல செலேக்டும் ஆகிடுராறு. பட் MIT க்கு என்ட்ரி பீஸ் கட்ட வசதியில்லாததால இன்னொரு ப்ராஜெக்ட் பண்ணி ஸ்கொலர்ஷிப் க்கு அப்ளை பண்ண தன்னோட இறந்து போன அப்பாவோட குறிப்புகள்ல எதாவது மாட்டுமான்னு அப்பாட பழைய திங்க்ஸ் ல தேடிக்கிட்டு இருக்கும்போது டேவிட் ஓட தங்கச்சி பழைய கேமரா ஒன்ன பார்க்குறா அது வொர்க் ஆகுதான்னு செக் பண்றப்போ டேவிட் ஓட எழாவது பர்த்டே வீடியோ போகுது (அன்னைக்குத்தான் அவர் அப்பாவும் இறந்தாறு) .அந்த வீடியோ ல உள்ள கண்ணாடில இப்ப உள்ள டேவிட் தெரிய சொக் ஆகுற டேவிட் அவனோட ரெண்டு பிரெண்ட்சையும் கூப்டு காட்டுறாரு.அப்புறம் அந்த வீடியோ ல உள்ள பெரிய வயசு டேவிட் என்ன பன்றாருன்னு பார்த்தா அவரு அந்த வீட்டோட பேஸ்மன்ட் க்கு போறாரு சோ இப்போ இந்த நாலு பேரும்   பேஸ்மன்ட் க்கு போய் செக் பண்றதுல டேவிட் ஓட அப்பா ரகசியமா மறச்சு வச்சுயிருந்த முழுசா முடிக்காத  "temporal displacement device" (அதான்யா டைம் மெசின்) உம் அதோட instruction உம் கிடைக்குது ...............

அப்புறம் என்ன time machine மாடல் இருக்கு MIT க்கு போற அளவு மூள உள்ள ஒருத்தர் இருக்காரு ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம். அதேதான் பையன் time machine அ உருவக்குறாப்புடி எல்லா time machine படத்துல வர்ற மாதிரியும் இதுலயும் இறந்த காலத்துக்கு போய் சேஞ்ச் பண்ற சின்ன மேட்டர் ஆல பெரிய மாற்றமே நடக்குது (அதான்யா butterfly effect) சோ அதுக்கப்றம் என்ன நடந்துது அப்டிங்கறதுதான் படம்....

ஏன் எனக்கு இந்த படம் புடிச்சு இருந்துதுன்னா :

1.எனக்கு ரொம்ப புடிச்ச Sci-Fi ஜேனர் அதுலயும் time travel
2.Teen intelligent
3.found footage camera angle(படத்துல உள்ள ஒரு கேரக்டர் ரெகார்ட் பண்ற மாதிரி      காட்டுவாங்க)
4.வசனங்கள்.

இதுங்கள விட்டு ஜெனரல்லா special effects,background music,பெரிய famous ஆன crew இல்லன்னாலும் அவங்க நடிப்பு,time machine  எல்லாம் "அட" போட வச்சுது

படத்தோட குறைகள் அப்டின்னு critics முக்கியமா found footage camera angle அ சொல்லிருக்காங்க but எனக்கு அது புடிச்சு இருந்துது.அப்புறம் படத்துல ஒரு சீன் interest ஆ போய்கிட்டு இருக்கும்போது அடுத்த சீன் மொக்கயா போகுது எனக்கும் இதே பீல் வந்துது but டோடல் படம் ஆ பாக்குறப்ப அதுவும் அவலோ பெரிய குறையா தெரியல.

இந்த படத்த Dean Israelite டைரக்ட் பண்ணி இருக்காரு அவோரோட முதல் பெரிய படம் இதுதான் பிகாஸ் producer நம்ம transformer டைரக்டர் Michael Bay.   Dean Israelite இப்போ அடுத்த வருஷம் ரிலீஸ் ஆகபோற "Power Rangers" படத்த டைரக்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு....

படத்துல என்ன ரொம்ப கவர்ந்த விஷயங்கள்/வசனங்கள்
1. டைம் ட்ராவல் பண்ணா ஹிட்லர் கொன்னுடு அப்படின்னு டேவிட் ஓட friend சொல்றப்ப அதுக்கு டேவிட் நம்ம யாருக்குமே ஜேர்மன் பேச தெரியாதேன்னு சொல்ல அதுக்குத்தான் கடவுள் google translator அ படச்சிருக்கார்னு  அவன் தங்கச்சி சொல்ல 1939 ல wifi இல்லையேன்னு அவன் சொல்றது செம.
2.டேவிட் உம் அவன்  friends உம் term வேர்ட்ஸ்ஸ யூஸ் பண்றப்ப அவன் தங்கச்சி "in English" அப்டின்னு கேக்குறது நல்லா இருந்துது.
3.எக்ஸாம்ல பாஸ் ஆகுற சீன்லாம் சூப்பர். .
4.time machine அ உருவாக்குற சீன் time travel அ விட செம interesting ஆ இருந்துது.
5.டேவிட்டுக்கு physics ரொம்ப நல்லா தெரியுற மாதிரியே David-jessie chemistry உம் நல்லா இருந்துது.

படத்த பத்தி அவ்ளோதான் போஸ்ட்ல சொல்லிருக்கன் வேற ஏதும்னா comment பண்ணுங்க ஜீ
"குறைகள் என்னிடமும் நிறைகள் பிறரிடமும் கூறுங்கள்"
Almanac=பஞ்சாங்கம்
IMDB=6.4/10

===கதைக்காக ஒரு தடவ பாக்கலாம்,புடிச்ச சின்ன சின்ன விஷயங்களுக்காக எத்துண தடவையும் பாக்கலாம் ====


நன்றி


Share:

8 comments:

 1. அருமையான வர்ணணை

  இந்த படம் தமிழ்ல வந்திச்சுங்களா ?

  உங்க எழுத்து நடைய படிக்கிறதுக்கு எளிமையா இருக்கும்படி பார்த்துக்கச்க

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி #Tex_Sampath, இது தமிழ்ல வரல but இங்கிலிஷ்ல பார்த்தாலும் easy யா புரியும்,
   நான் இலங்கைத் தமிழன் முடிந்தவரை அனைவருக்கும் புரியும் படி எழுத முயற்சித்தேன் , வரும் காலங்களில் மேம்படுத்தி கொள்கிறேன்

   Delete
 2. Replies
  1. நன்றி #Anbazhagan_Ramalingam தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்

   Delete
 3. Replies
  1. நன்றி #Anbazhagan_Ramalingam தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்

   Delete
 4. Replies
  1. நன்றி #mylai_homenaath தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்

   Delete

BTemplates.com

Powered by Blogger.

Pages

Pages - Menu